Home இலங்கைமன்னாரில் 59 ஆவது தடவையாக மனித எலும்புக்கூடுகள் அகழ்வு

மன்னாரில் 59 ஆவது தடவையாக மனித எலும்புக்கூடுகள் அகழ்வு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மன்னார் ‘சதோச’ வளாகத்தில் தொடர்சியாக சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்;கப்பட்டு வருகின்ற நிலையில் 59 ஆவது தடவையாக இன்று செவ்வாய்க்கிழமை அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல் துறை போராசிரியர் தலைமையில் இடம் பெற்ற இந்த அகழ்வு பணியில் தற்போது வரை சுமார் 102 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.அவற்றில் 95 மனித எச்சங்கள் குறித்த வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிகமாக காணப்படும் 7 மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகள் இன்று இடம் பெற்ற போதும் குறித்த மனித எச்சங்களுக்கு கீழேயும் , மேலேயும் அதிகளவிலான மனித மண்டையோடுகள் காணப்படுவதனால் அப்புறப்படுத்தும் பணிகளை முழுவதுமாக முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

தற்போது வரை குறித்த வளாகத்திலேயே மீட்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் சுத்தப்படுத்தப்பட்டு அடையாளப் படுத்தப்பட்டு பொதி செய்யப்பட்டுகின்றது.குறித்த மனித புதை குழி தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆராய்வதற்கான உயர் மட்;ட கலந்துரையாடல் இவ்வார இறுதிக்குள் இடம் பெறவுள்ளதாக தெரிய வருகின்றது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More