குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகர் பிரிவுக்கு உட்பட்ட பிரவுன் வீதி பகுதியில் உள்ள வயல் கால்வாயில் இன்று காலை யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று 29-08-2018 காலை அப்பகுதிக்கு பின்புறமாக உள்ள குளத்திற்கு மீன்பிடிக்க சென்ற இருவர் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதனை அடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த யுவதிக்கு வயது சுமார் இருபது மதிக்கதக்கது என தெரிவிக்கப்படுகிறது. சடலத்தின் முகப்பகுதியில் பாரிய காயம் இருப்பதுடன் உள்ளாடைகளுடன் சடலம் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையால் இது கொலையாக இருக்கலாம் எனவும் சில வேளைகளில் இது வன்புணர்வின் பின் கொலையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை குறித்த சடலம் யாருடையது என அடையாளம் காணப்படாத நிலையில் சம்பவ உள்ளது.
இதேவேளை சம்பவ இடத்திலிருந்து சிவில் பாதுகாப்பு அதிகாரிகளின் சீருடை இடுப்புப்பட்டி மற்றும் பேனா உட்ப சில தடயப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன இதனையடுத்து குறித்த பகுதிக்கு சென்றுள்ள காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




Comments are closed.