212
பசுபிக் பெருங்கடலில் உள்ள நியூ கலிடோனியா தீவில் 7.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதனையடுத்து அப்பகுதியில் உள்ள மூன்று தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடலில் சுமார் 24 கிலோ மீட்டர் ஆழத்தினை மையமாக கொண்டு இந்த நில நடுக்கம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள பிஜி, வானட்டு தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதுடன் சுமார் 1 மீட்டர் உயரத்திலான அலைகள் வீசலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பேரிடர் அறிவிப்பும் விடப்பட்டுள்ளது.
Spread the love