Home இலங்கைமன்னார் நீதவான் ரீ.ஜே.பிரபாகரனுக்கு திடீர் இடமாற்றம்….

மன்னார் நீதவான் ரீ.ஜே.பிரபாகரனுக்கு திடீர் இடமாற்றம்….

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

மன்னார் மாவட்ட நீதவானாக கடமையாற்றிய ரீ.ஜே.பிரபாகரனுக்கு கொழும்பிற்கு திடீர் இடமாற்றம் வளங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. நேற்று புதன் கிழமை (29.08.18) மாலை உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த இட மாற்றக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இன்றைய தினம் (30.8.18) கொழும்பில் அவர்  தனது கடமையை பெறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிய வந்துள்ளது.

மன்னார் மாவட்ட நீதவனாக ரீ.ஜே.பிரபாகரன் நியமனம் செய்யப்பட்டு மூன்று மாதங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பல்வேறு வழக்கு விசாரனைகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

மேலும் காவற்துறையினரின்  செயற்பாடுகள் குறித்து தனது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதோடு, சில வழக்கு விசாரனைகளை கடுமையாக முறையில்  மேற்கொண்டு வந்தமை மற்றும், நீதவானுக்கு எதிராக வழங்கப்பட்ட முறைப்பாடுகள் போன்ற வற்றின் காரணமாகவே மன்னார் நீதவான் ரீ.ஜே.பிரபாகரனுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக மன்னாரில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்ற போதும், இடமாற்றத்திற்கான காரணம் பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை….

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More