141
தாதிமார், மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட கூட்டு தொழிற்சங்கம் இலங்கையின் வட மேல மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
விடுமுறைக் கொடுப்பனவு, நிலுவை சம்பளம் என்பன ஒரு வருட காலத்திற்குள் செலுத்தாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக அதன் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்ணப்பிரிய கூறினார்.
இன்று காலை 07.00 மணி முதல் நாளை (31.08.18) காலை 07.00 மணி வரையில் 24 மணி நேர வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக சமன் ரத்ணப்பிரிய கூறினார்.
Spread the love