மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் இலவச பயிற்சி அளிக்க இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உயர்கல்வி துறையில் நுழைவு தேர்வுகளை நடத்துவதற்கு தேசிய போட்டி தேர்வு முகமை என்ற அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளதுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 2,697 மையங்கள் இதற்காக செயல்பட்டு வருகின்றன.
இந்த மையங்களை நீட் பயிற்சி மையங்களாக மாற்றி மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்த பயிற்சி மையங்கள் செப்டம்பர் 8ம் திகதிமுதல் செயல்பட தொடங்கும் எனவும் மேலும் இதற்கான மொபைல் அப்கள் மற்றும் இணைய விண்ணப்பங்கள் நாளை முதலாம் திகதியிலிருந்து ஆரம்பமாகும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.