பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்பு சந்தேகத்தில் அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத குற்றச்சாட்டில் இலங்கை பிரஜை ஒருவர் நேற்றையதினம் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன. மொஹமட் நிஸாம்டீன் என்னும் 25 வயதுடைய இளைஞர் ஒருவரே அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருடைய மாணவர் விசா செப்டம்பர் மாதம் காலாவதியாக உள்ளதாகவும், சிட்னியிலுள்ள கென்சிங்டனில் உள்ள NSW பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிக்கொண்டு இருப்பவர் எனவும், இலங்கை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கு வைக்கப்பட்டுள்ள நபர்கள், இடங்களின் பெயர்கள் உள்ளிட்டவை அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட குறிப்பேட்டு புத்தகத்தில் ஆவணப்படுத்தப்பட்டு இருந்ததாக சிட்னியின் பயங்கரவாத எதிர்ப்பு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை காலை ஜெட்லண்டில் உள்ள ஒரு பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஏராளமான மின்னணு பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதல்களுக்கு திட்டமிடுதல், தகவல்களை ஆவணப்படுத்தல், அதனுடனான ஈடுபாடு, பயங்கரவாத நடவடிக்கைக்கு உதவுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் இவர்மீது சுமத்தப்பட்டுள்ளன.
அவர் இன்று வெள்ளிக்கிழமை Waverley உள்ளூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது பிணையில் செல்ல நீதிமன்றம் மறுத்துள்ளதுடன் விசாரணைக்காக தடுத்து வைக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
இந்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தீவிரமானவையாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் இருப்பதாகவும், அவுஸ்திரேலிய சமஸ்டி காவற்துறையின் துப்பறியும் அதிகாரி மைக்கேல் மெக்டெர்ரன் தெரிவித்துள்ளார். எனினும் கைது செய்யப்பட்டவருக்கு எதிராக எவ்வித பயங்கரவாத குற்றச்சாட்டுக்களும் இதற்கு முன்னர் சுமத்தப்படவில்லை எனவும் அதற்கான பதிவுகள் fகாணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Nizamdeen was set to face Waverley Court today. (Supplied)
Nizamdeen was set to face Waverley Court today. (Supplied)