Home இந்தியா ஆண்களின் திருமண வயதையும் 18ஆக குறைக்க வேண்டுமென சிபார்சு :

ஆண்களின் திருமண வயதையும் 18ஆக குறைக்க வேண்டுமென சிபார்சு :

by admin


ஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க வேண்டும் என மத்திய சட்ட ஆணையகம் சிபாரிசு செய்துள்ளது. இந்தியாவில் தற்போது ஆண்களின் திருமண வயது 21 ஆகவும் பெண்களின் திருமண வயது 18 ஆகவும் காணப்படுகின்றது.

இந்த நிலையில், குடும்ப சட்டத்தில் சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் மத்திய சட்ட ஆணையம் செய்துள்ள சிபாரிசில ஆண்களின் திருமண வயதையும், பெண்கள் திருமண வயதைப் போன்று 18 ஆக குறைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

பெரும்பான்மைக்கான உலகளாவிய வயது 18 என அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. அனைத்து குடிமக்களும் தங்கள் அரசுகளை தேர்ந்தெடுக்கும் உரிமை அந்த வயதில் வழங்கப்பட்டு உள்ளது. அவ்வாறு இருக்கும் போது அவர்களுக்கு தங்கள் மனைவியை தேர்ந்தெடுக்கும் திறனும் அந்த வயதில் வந்து விடுகிறது என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் திருமணத்துக்கு பெண்ணுக்கு 18 வயது, ஆணுக்கு 21 வயது என மாறுபட்ட வயது வரையறை இருப்பது, மனைவியானவள் கணவனை விட இளமையாக இருக்க வேண்டும் என்ற ஒரே மாதிரியான பங்களிப்புக்குத்தான் வழிவகுக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

மேலும், குடும்பத்தின் பெண்களின் பங்கை அங்கீகரிப்பது அவசியம்; அவர்கள் குடும்பத்துக்காக பணம் சம்பாதித்து தந்து இருக்கிறார்களா என பார்க்காமல், அவர்கள் விவாகரத்து செய்திருந்தாலும், திருமணத்துக்கு பின் வாங்கிய சொத்தில் சம பங்கு அளிக்க வேண்டும் எனவும் சட்ட ஆணையகம் பரிந்துரை செய்து உள்ளது.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More