Home இலங்கையாழ்.மாவட்டத்தில் 4,500 ஏக்கர் காணிகள், இராணுவ வசம்….

யாழ்.மாவட்டத்தில் 4,500 ஏக்கர் காணிகள், இராணுவ வசம்….

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


யாழ்.மாவட்டத்தில், பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளில், இன்னும் 4,500 ஏக்கர் காணிகள், இராணுவத்தின் பாவனையில் உள்ளனவென எனவும், எதிர்வரும் ஆண்டுகளில், இந்தக் காணிகள் விடுவிக்கப்படலாம் எனவும் யாழ். மாவட்ட மேலதிக காணி அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற நிதிக்குழுவின் கூட்டம், யாழ். மாவட்ட செயலகத்தில், அக்குழுவின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையில், இன்று காலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டிருந்த சுப்பிரமணியம் முரளிதரன், மீள்குடியேற்றம், நிதி ஒதுக்கீடு மற்றும் உட்கட்டமைப்பு உள்ளிட்டவை பற்றி எடுத்துரைத்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More