கூட்டு எதிர்க்கட்சி பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இந்திய பயணம் ஒன்றை மேற்கொள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய விடுத்த அழைப்பினை கூட்டு எதிர்க்கட்சி நிராகரித்துள்ளது.
குறித்த அழைப்பினை நிராகரித்து எழுத்து மூலமாக சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அதிக உறுப்பினர்கள் இருக்கும் கூட்டு எதிர்க்கட்சிக்கு, எதிர்கட்சி உரிமை வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த அழைப்பினை நிராகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் கூட்டு எதிர்க்கட்சியினால் நாளை (05.09.18) முன்னெடுக்கப்பட் உள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பில் இன்று (04.09.18) மாலை விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற உள்ள இந்த கலந்துரையாடலில் மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.