அமெரிக்க டொலருக்கு எதிரான இந்திய ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் இன்று 71.87 ரூபாவாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் பதற்றம், சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவற்றால் அமெரிக்க டொலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று வீழ்ச்சி அடைந்துள்ளது.
பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, நேற்றைய டொலருக்கெதிரான மதிப்பானது 71.43 சதத்துடன் ஆரம்பமான போதும் வர்த்தகத்தின் இடையே ரூபாய் மதிப்பு 71ரூபா 40 சதத்துக்கு வந்தது.எனினும் பிற்பகலுக்குப் பின் மீண்டும் ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டு 71 ரூபா 87 சதங்களாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது