Home இந்தியாமலையாள எழுத்தாளரின் மீஷா புத்தகத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

மலையாள எழுத்தாளரின் மீஷா புத்தகத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

by admin


மலையாள எழுத்தாளர் ஹரீஷ் எழுதிய மீஷா என்ற புத்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. மலையாள எழுத்தாளரான ஹரீஸ், மாத்ரூபூமி இதழில் எழுதிய மீஷா என்ற தொடர் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில் பின்னர் புத்தகமாக வெளிவந்தது.
இந்த புத்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும் என டெல்லியை சேர்ந்த ராதா கிருஷ்ணன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

புத்தகத்தில் கோயில் பூசாரிகள் மற்றும் இந்துப் பெண்களின் நிலை குறித்து மோசமாக சித்தகரித்து இருப்பதால் புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இந்த காலத்தில் இது போன்ற விசயங்களை பெரியதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் எழுத்தாளர்களின் கற்பனைத் திறனுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது எனத்தெரிவித்ததுடன் இலக்கியப் படைப்புகளை தடை செய்யவும் இயலாது எனவும் தெரிவித்து உத்தரவிட்டுள்ளனர்.

இதுவரை ராசவித்யாயுடே சரித்ரம், ஆதாம், அப்பன் என்ற மூன்று புத்தகங்களை வெளியிட்டுள்ள ஹரீஸ், ஆதாம் புத்தகத்துக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More