காதலை ஏற்க மறுக்கும் பெண்களை கடத்துவேன் என்ற பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினர் ராம் கதமின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு 8 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு மாநில மகளிர் ஆணையகம் அவருக்குஅழைப்பாணை அனுப்பி உள்ளது.
மும்பையில் இடம்பெற்ற உறியடி நிகழ்ச்சியில் இளைஞர்கள் மத்தியில் பேசிய பா.ஜனதா ராம் கதம், உங்கள் காதலை ஏற்க மறுக்கும் பெண்களை உங்களுக்காக கடத்தி வருவேன் எனவும் இதற்காக தனது கைபேசி எண்ணை குறித்து வைத்து கொள்ளுங்கள் எனவும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தத்தொடர்ந்து, ராம்கதம் . தனது கருத்துக்காக வருத்தம் தெரிவித்தார்.
எனினும் ; அவருக்கு எதிராக நேற்று 2-வது நாளாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் இடம்பெற்ற நிலையில், ராம் கதமின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு 8 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு மாநில மகளிர் ஆணையகம் அவருக்கு அழைப்பாணை அனுப்பி உள்ளது.
இந்த நிலையில், ராம் கதம் வகித்து வந்த பா.ஜனதாவின் மாநில செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது