குளோபல் தமிழ் செய்தியாளர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலை நாயாறு பகுதியில் விகாரை அமைப்பதற்காக பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமிக்க தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்ட முயற்சி மக்களினால் முறியடிக்கப்பட்டது. எந்தவிதமான முன்னறிவித்தல்களும் இன்றி திருட்டுத்தனமாக தொல்லியல் திணைக்களம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாகவும் பொதுமக்களின் காணிகளை விகாரை அமைச்ச அளவீடு செய்வது சட்ட விரோதமானது என்றும் அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் முல்லை குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைத்து குடியேற முயன்ற பிக்குகள் அப் பகுதி இளைஞர்களால் அடித்து விரட்டப்பட்ட நிலையில் இன்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை சட்டவிரோதமாக, அனுமதியில்லாமல் சிலைகளை வைக்க அனுமதிக்க கூடாது என்று தொல்லியல் திணைக்கள பணிப்பாளரிடம் தாம் வலியுறுத்தியதாக அமைச்சர் மனோ கணேசன் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
படங்கள் – குமணன்