டெல்லி செங்கோட்டை அருகே பயங்கர ஆயுதங்களுடன் ஐஎஸ் தீவிரவாதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்துவதற்காக பல்வேறு தீவிரவாத அமைப்புகளும் சதி செய்து வருவதாக அண்மையில் தகவல் வெளியாகியதையடுத்து பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீவிரவாதிகளின் தொலைபேசி உரையாடலை வழிமறித்து கேட்ட சிறப்பு அதிரடிப்படையினர் செங்கோட்டை அருகே 2 தீவிரவாதிகளை கைது செய்துள்ளனர் எனவும் அவர்களிடம் இருந்து நவீன துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையில் அவர்கள் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும்ம், ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து ஆயுத பயிற்சி பெற்றவர்கள் எனவும் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அவர்களிடம் சிறப்பு அதிரடிப்படை பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Add Comment