Home இந்தியா13 நாளாக உண்ணாவிரதம் இருந்துவரும் ஹர்திக் பட்டேல் மருத்துவமனையில் அனுமதி

13 நாளாக உண்ணாவிரதம் இருந்துவரும் ஹர்திக் பட்டேல் மருத்துவமனையில் அனுமதி

by admin

குஜராத்தில் 13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் ஹர்திக் பட்டேல் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஹர்திக் பட்டேல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.  13-வது நாட்களாக சாப்பிடாததால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை ஹர்திக் பட்டேல் உடல்நிலை நேற்றே மோசமடைந்தததனால் அரசு அவசர ஆலோசனை நடத்தியுள்ளது. அதில் கலந்து கொண்ட பட்டேல் சமூக அமைசசர்கள் மற்றும் சமூக தலைவர்கள் அரசு ஹர்திக் பட்டேலுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
எனவே, அவருடன் அரசு சார்பில் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 25 வயதே ஆன ஹர்திக் பட்டேல் குஜராத்தில் பட்டேல் சமூகத்தினரின் மத்தியில் புகழ் பெற்ற தலைவராக திகழ்கிறார்.
இவர், பதிதார் அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தை ஆரம்பித்து அதன் மூலம் போராட்டங்களை நடத்தி வருகிறார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More