Home பிரதான செய்திகள்அமெரிக்க ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச் சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச் சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார்.

by admin

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்களுகடகான ஒற்றையர் பிரிவில் குரோஷியாவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார்.

ஜோகோவிச் இறுதிப் போட்டியில் ஆர்ஜென்ரீன வீரரான டெல் போட்ரோவை எதிர்கொண்டு 6-3, 7-6(4), 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றியீட்டி 3வது முறையாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார். இதுவரை மொத்தமாக 14 கிராண்ட்ஸ்லாம் கிண்ணங்களை வென்றுள்ள ஜோகோவிச் தரவரிசையில் பீட் சாம்ப்ராஸ் உடன் 3வது இடத்தினை பகிர்ந்துகொண்டுள்ளார்.

தரவரிசைப்பட்டியலில் சுவிச்சர்லாந்தின் ரொஜர் பெடரர் 20 கிண்ணங்களை வென்று முதலிடத்திலும் ரபேல் நடால் 17 கிண்ணங்களை வென்று இரண்டாவது இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More