Home இலங்கைவடக்கு கிழக்கில் விவசாயத்துறையில் அதிகளவு பிரச்சினைகள் – அங்கஜன் :

வடக்கு கிழக்கில் விவசாயத்துறையில் அதிகளவு பிரச்சினைகள் – அங்கஜன் :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் விவசாயத்துறையில் அதிகளவான பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதனால்தான் அரசு தனக்கு இப் பதவியை தந்துள்ளனர் என பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இன்று (11-09-2018) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட விவசாயக் குழு கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

ஒரு காலத்தில் விவசாய உற்பத்தியில் முன்னிலை வகித்த வடக்கு மாகாணம் இன்று ஆக கடைசி நிலையில் உள்ளது. வடக்கின் விவசாய உற்பத்திகள் அதிகளவு வீழ்ச்சியடைந்துள்ளன.  வடக்கில் 40 வீதமானவர்கள் விவசாயிகளாக காணப்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர் வடக்கு கிழக்கின் விவசாயத் துறையினை மேம்படுத்த அரசிடம் விசேட மீள் எழுச்சி நிதியினை கோரியஜருப்பதாகவும் அரசும் அதனை ஒதுக்கீடு செய்வதற்கு இணங்கியுள்ளதுஎனவும் தெரிவித்துள்ளார்.

தனது பிரதி விவசாய அமைச்சர் பதவியின் ஊடாக மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் சுந்திரம் அருமைநாயகம், மற்றும் கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் ஆயகுலன், கரைச்சி பூநகரி பச்சிலைப்பள்ளி, பிரதேச செயலாளர்கள், கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More