Home இந்தியாஎட்டு வழிச்சாலை திட்டத்தை தடை செய்ய நேரிடும் – சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

எட்டு வழிச்சாலை திட்டத்தை தடை செய்ய நேரிடும் – சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

by admin

சென்னைக்கும் சேலத்திற்கும் இடையிலான எட்டு வழிச்சாலை திட்டத்தை தடை செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மரங்களை வெட்டக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறிச் செயற்பட்டால் ஒட்டுமொத்த திட்டத்துக்கும் தடை விதிக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான பொதுநல வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் தலைமையிலான அமர்வின்போது இன்று விசாரணைக்கு வந்ததபோது, எட்டு வழிச்சாலைக்காக மரங்களை வெட்டும் நலிமை எந்தளவில் உள்ளது என்பது குறித்த அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், சமூக பாதிப்பு மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை எந்த நிலையில் உள்ளது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 8 வழிச்சாலைக்கு மரங்களை வெட்ட கூடாது என்ற உத்தரவை மீறி தமிழக அரசு செயற்பட்டால் ஒட்டுமொத்த திட்டத்துக்கும் தடை விதிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். அரச அதிகாரிகளின் நிலங்களை கையகப்படுத்தினாலே பொதுமக்களின் நிலைமை அவர்களுக்குப் புரியும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More