Home இலங்கைஆட்சிக் காலத்தில் புத்தமயவாக்கம் – இப்போ இந்துஸ்தான் சங்கத்தின் பிரதம அதிதி…

ஆட்சிக் காலத்தில் புத்தமயவாக்கம் – இப்போ இந்துஸ்தான் சங்கத்தின் பிரதம அதிதி…

by admin

குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி வந்துள்ளார் என,  இந்­திய பார­திய ஜனதா கட்­சியின் தலை­வர்­களில் ஒரு­வ­ரான சுப்பி மணியன் சுவாமி, மகிந்த ராஜபக்ஸவை குறிப்பிட்டுள்ளார்.  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் டில்லி பயணம் தொடர்பில் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட   சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி, முன்னாள் ஜனாதிபதியும் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வரவுள்ள மகிந்த ராஜபக்ச, இந்துஸ்தான் சங்கம் நடாத்தும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, பொதுக்கூட்டத்தில் உரையாடவுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டதுடன் அங்கு பௌத்த சிலைகள், விகாரைகள் என்பன  அமைக்கப்பட்ட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளளன.
இந்த நிலையில் மகிந்த ராஜபக்ச இந்துஸ்தான் சங்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவது மிகவும் வேடிக்கையானது என தமிழகத்தை சேர்ந்த அரசியல் விமர்சகர் ஒருவர் கூறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை விடுவிப்பது தொடர்பில் மகிந்தவிடம் ஊடகவியலாளர்கள் கருத்துக் கேட்டபோது, இது இந்திய அரசின் முடிவின்பாற்பட்டது என்றும் சட்டவிவகாரத்தில் கருத்துக் கூற விரும்பவில்லை என்றும் மறுப்புத் தெரிவித்தார்.

 
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More