உலகம் பிரதான செய்திகள்

உலகின் தலைசிறந்த பொருளாதார மையம் என்ற பெருமையை இழந்த லண்டன் நகரம் :


உலகின் தலைசிறந்த பொருளாதார மையம் என்ற பெருமையை லண்டன் நகரத்திடமிருந்து இருந்து நியூயோர்க் நகரத்து கைமாறியுள்ளது. உலகின் மிகச்சிறந்த பொருளாதார நிறுவனங்கள், வர்த்தக கம்பெனிகள் லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தமையால் உலக அளவில் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள லண்டன் வசதியான பகுதியாக கருதப்பட்டது. இதனால் உலகின் தலை சிறந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இங்கு தங்கள் தலைமையிடத்தை வைத்திருந்தன.

எனினும் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக தீர்மானிததையடுத்து ஒன்றுபட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார பயன்கள் மற்றும் நாணயத்தின் பெறுதியை இழந்தது.லண்டனில் இருந்தால் யூரோவில் வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகும் என்பதால் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் வெளியேறி வருகின்றன.

இதனால், முதலீடுகளை ஈர்ப்பதில் உலகின் மிகப்பெரிய பொருளாதார மையமாக இருந்த லண்டன் தற்போது அந்த சிறப்பை நியூயார்க் நகரிடம் இழந்துள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது. நிதி நிறுவனங்களின் அலுவலகங்கள், உள்கட்டமைப்பு, அதிகமான பணியாளர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இதில், நியூயோர்க் பிடித்துள்ளதனையடுத்து லண்டன் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மூன்றாம் இடத்தில் ஹொங்காங்கும் நான்காம் இடத்தில் சிங்கப்பூரும் காணப்படுகின்றன.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers