இலங்கை பிரதான செய்திகள்

பேருவளை கடற்பரப்பில் படகு கப்பலுடன் மோதி விபத்து மீனவர்கள் நால்வர் பலி – இருவரைக் காணவில்லை


பேருவளை கடலில் மீன்பிடிக்க சென்ற படகு ஒன்று கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் இருவரைக் காணவிவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பேருவளை கடலிற்கு 7 பேருடன் சென்ற படகு இந்நாட்டு எல்லைக்குள் கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 7 பேரில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காணாமல் போயுள்ளதாகவும் ஒருவர் காப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.உயிரிழந்தவர்களின் சடலங்களையும் காப்பற்றப்பட்ட நபரையும் காலி துறைமுக காவல் நிலையத்திற்கு எடுத்து வர கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers