சவூதி அரேபியாவில் முதன்முறையாக ரியாத்தைச் சேர்ந்த விமான நிறுவனம் உன்று பெண்களை இணை விமானிகளாகவும், விமான ஊழியர்களாகவும் பணியில் அமர்த்த உள்ளது. பிளைனஸ்(Flynas) என்னும் விமான நிறுவனமே இந்தப் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
நாட்டின் மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் சவூதிப் பெண்களுக்கு அதிகாரமளிக்க பிளைனஸ் நிறுவனம் விரும்புகிறது எனவும் இணை விமானிகள் மற்றும் பணிப்பெண்களின் வேலைக்காக இதுவரை சுமார் 1000 சவூதிப் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களில் பொருத்தமானவர்கள் வேலைக்குத் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சவுPதியில் விமானத்துறையில் பணிபுர்pவதற்கு பெண்களுக்குத் தடை எதுவும் விதிக்கப்படவில்லை என்ற போதிலும் அத்தகைய வேலைகளில் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த பெண்களே அதிகம் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலை இனி மெல்ல மாறும் எனவும் குறித்த விமானநிறுவனம் தெரிவித்துள்ளது.