Home இலங்கைதிலீபனின் நினைவேந்தல் நிகழ்வு யாழ். பல்கலைக்கழகத்திலும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு யாழ். பல்கலைக்கழகத்திலும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இந்திய அமைதிப் படைகளுக்கு எதிராக ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சை வழியில் உணவொறுப்புப் போராட்டம் செய்து வீர காவியமான தியாகி லெப். கேணல் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று 15 ஆம் திகதி சனிக் கிழமை காலை யாழ். பல்கலைக்கழகத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.

தியாகி திலீபன் தன் உணவொறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்த நேரத்தில் பல்கலைக் கழகத்தில் நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமாகியது. பல்கலைக்கழகத் துணைவேந்தர், விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பெருமளவானோர் நிகழ்வில் கலந்து கொண்டு, ஈகைச் சுடரேற்றி, மலர் சூடி அஞ்சலித்தனர்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More