உலகம் பிரதான செய்திகள்

மெக்சிகோவின் சுற்றுலா மையத்தில் துப்பாக்கி சூடு – 4 பேர் பலி…

மெக்சிகோவின் சுற்றுலா மையத்தில் இனம் தெரியாதவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவின் கரிபால்டி சுற்றுலா தலத்தில், நேற்று அதிகமானோர் அங்கு வார விடுமுறையை கழித்துக் கொண்டிருந்தவேளை இசைக்கலைஞர்கள் போல் வேடமிட்ட 5 பேர் கொண்ட குழு துப்பாக்கிகளால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூட்டை நடத்தியபின் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த திடீர் தாக்குதலில் ஒரு பெண் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவலறிந்து அங்கு சென்ற காவற்துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த துப்பாக்கி சுட்10டு சம்பவம் குறித்து காவற்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.