Home இலங்கைகாலாவதியான பிஸ்கட்டுகளை உண்டதனாலேயே மாணவிகள் மயங்கினர்

காலாவதியான பிஸ்கட்டுகளை உண்டதனாலேயே மாணவிகள் மயங்கினர்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் இல 2 பாடசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாணவிகள் காலாவதியான பிஸ்கட்டுகளை உண்டதால்தான் மயங்கி விழுந்தனர் என வைத்தியசாலையினர் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு சென்ற மாணவிகள் அங்கு தாங்கள் கொண்டு சென்ற பிஸ்கட்டுளை உண்ட போது மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக அக்கராயன் மருத்துவமனைக்கு அவசர நோயாளர் காவு வண்டி மூலம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினர்.

காலையில் பாடசாலைக்கு செல்லும் போது கிராமத்தில் உள்ள கடையொன்றில் மூன்று மாணவிகளும் பிஸ்கட் பைக்கற்றுக்களை வாங்கி சென்று பாடசாலையில் உண்ட போதே மயங்கிவிழுந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More