குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
30 வருடகால போரின் வடுக்களை மூன்று வருட காலத்தில் தீர்ப்பதென்பது சாதாரண விடயமல்ல என விஐயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாண பிரதேச செயலகத்திற்கான உத்தியோகபூர்வ ஜனாதிபதி மக்கள் சேவையில் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறிப்பாக நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகின்றன எனினும் 30 வருடமாக நிலவிய போரின் வடுக்களிற்கு 3 வருடத்தில் தீர்வு காண்பது என்பது சாதாரணவிடயமல்ல.எனினும் இந்த நல்லாட்சி அரசாங்கமானது மூன்று ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது மக்களுக்கு செய்யவேண்டிய பலவற்றை செய்துள்ளது எஞ்சியுள்ள காலப்பகுதியில் ஏனையவற்றை செய்யும் என விஜயகலா மகேஸ்வரன் அதை தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த விஜயகலா மகேஸ்வரன் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரே வடக்கில் ஐனநாயகம் நிலைநாட்டப்படடுள்ளது முன்னைய ஆட்சியில் ஐனநாயகம் என்ற சொல்லுக்கே இடமில்லாத நிலையே காணப்பட்டது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் வடக்கில் இராணுவத்தினரிடமிருந்த காணிகளை விடுவித்திருக்கிறோம்.
மேலும் பல வேலைத்திட்டங்களை இந்த நல்லாட்சி அரசினால் நாம் செய்து வருகிறோம் எனவும் தெரிவித்தார்.இன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற யாழ்ப்பாண பிரதேச செயலகத்திற்கான உத்தியோகபூர்வ ஜனாதிபதி மக்கள் சேவை. ஆரம்ப நிகழ்வில் பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்டதோடு பயனாளிகளுக்கு உதவி பொருட்களும் வழங்கி வைத்தனர் அத்துடன் திருமண பதிவும் மேற்கொள்ளப்பட்டது.