Home பிரதான செய்திகள்நடால் சீனா ஓபன் ஷங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார்

நடால் சீனா ஓபன் ஷங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார்

by admin

ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால் சீனா ஓபன் ஷங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார். டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தை வகிக்கின்ற நடால் . அண்மையில் நடைபெற்ற அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியிருந்த நிலையில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறியிருந்தார்.

இந்நிலையில் விரைவில் நடைபெறவுள்ள சீனா ஓபன் ஷங்காய் மாஸ்டர்ஸ் தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என நடால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த தொடர்களில் இருந்து நடால் விலகுவதால் 1100 புள்ளிகளை இழக்க வாய்ப்புள்ளதனால் 3-வது இடத்தில இருக்கும் ஜோகோவிச் முதல் இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More