மலேசியாவில் விஷ சாராயம் குடித்ததில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் மதுபானங்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படுவதன் காரணமாக அங்கு வீடுகளில் மதுபானங்கள தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தலைநகர் கோலாலம்பூர் மற்றும் செலங்கோர் மாகாணத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மதுபானம் குடித்தவர்களில் சுமார் 57 பேர் மயங்கி விழுந்ததாகவும் உடனடியாக அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஏiயோருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மதுபானம் மெத்தனால் கொண்டு தயாரிக்கப்பட்டமையினாலேயே அதில் விசம் கலந்துள்ளதாகவும் அதனையறியால் அவர்கள் பருகியமையினாலோயே இவ்வாறு உயிரிழக்க நேரிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் மலேசியர்கள். எனவும் ஏனையவர்கள் பங்களாதேஸ், இந்தோனேசியா, மியன்மார், நேபாளம் போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படும் அதேவேளை இது தொடர்பில் 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.