Home உலகம்பென்சில்வேனியாவில் நீதிபதியின் அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி – நால்வர் காயம்

பென்சில்வேனியாவில் நீதிபதியின் அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி – நால்வர் காயம்

by admin

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள நீதிபதி ஒருவரின் அலுவலக வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  அலுவலக வளாகத்தில் நூற்றுக்கணக்கானோர் குழுமியிருந்த நிலையில் திடீரென அங்கு வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதில் அங்கு கடமையில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ; அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கிதாரி சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More