Home இலங்கைபணியில் விரக்தி – அக்கராய்ன் மருத்துவமனையின் பெண் பணியாளர் தற்கொலை முயற்சி

பணியில் விரக்தி – அக்கராய்ன் மருத்துவமனையின் பெண் பணியாளர் தற்கொலை முயற்சி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி அக்காரான் பிரதேச வைத்தியசாலையின் பெண் பணியாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் காப்பாற்றப்பட்டு்ள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

நேற்றைய தினம்(19-09-2018) வைத்தியசாலையில் கடமை நேரத்தில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதன் போது உடனடியாக செயற்பட்ட ஏனைய பணியாளர்கள் அவரை காப்பாற்றி அவசர நோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி மாட்ட வைத்தியசாலைக்கு அனுப்பபட்டு சிகிசை பெற்று வருகின்றார்.

பணியின் நிமிர்த்தம் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக கடந்த சில நாட்களாக மனச் சோர்வுக்குட்பட்டிருந்த நிலையில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக சக பணியாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறே ஒரு மாத்திற்கு முன்னர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையிலும் ஒரு பணியாளர் தற்கொலைக்கு முயற்சி செய்து காப்பாற்றப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More