Home பிரதான செய்திகள் ஆசிய கிண்ணம் – பங்களாதேஸை 136 ஓட்டங்களால் ஆப்கானிஸ்தான் வென்றுள்ளது

ஆசிய கிண்ணம் – பங்களாதேஸை 136 ஓட்டங்களால் ஆப்கானிஸ்தான் வென்றுள்ளது

by admin

அபிதாபியில் நடைபெற்று வரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் அணிகள் போட்டியிட்ட நிலையில் பங்களாதேஸ் அணியை 136 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. நாணயச்சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தநிலையில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 255 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 256 ஓட்டங்கள் என்ற வெற்றிஇலக்குடன் களமிறங்கிய பங்களாதேஸ் அணி 42.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 119 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் ஆப்கானிஸ்தான் அணி 136 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது.

57 ஓட்டங்கள் எடுத்ததுடன் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு வித்திட்ட ரஷித் கான் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More