0
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தில் ஹார்போர் கவுண்டி என்ற நகரில் ரைட் ஏய்ட் என்ற மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் ; இனம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உள்ளூர் நேரப்படி வியாழகிழமை காலை அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த குறித்த இனம் தெரியாத துப்பாக்கிதாரி 3 பேரை சுட்டுக்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 5 பேர் வரை காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமார் 1000 பணியாளர்கள் அங்கு கடமையில் இருந்துள்ள நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றமையானது தொழிலாளர்களிடையே அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
காவற்துறை மற்றும் சிறப்பு அதிரடி படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..
..
Spread the love