எகிப்து விமர்சகர்களுக்கான திறந்தவெளிச் சிறையாக மாறிவருகிறது என குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் அமைதியான முறையில் தங்கள் கருத்துகளை வெளியிடும் மக்களைச் சிறையில் அடைப்பதைக் கைவிட வேண்டும் எனவும் பேச்சு சுதந்திரத்தை நசுக்கும் வகையிலான சட்டத்தைத் மீளப் பெற வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை எகிப்து அரசிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
எகிப்து ஜனாதிபதி அப்துல் பட்டா எல் சிசியை விமர்சித்தமைக்காக கடந்த டிசம்பர் மாதம் முதல் இதுவரை 111 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள் எனவும் சர்வதேச மன்னிப்புசபை சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை எகிப்தின் சமகால வரலாற்றில் இந்த அளவுக்கு அடக்குமுறை இருந்ததில்லை எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது