Home இலங்கை“உச்ச துரோகத்தின் குறியீடு” வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்…

“உச்ச துரோகத்தின் குறியீடு” வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்…

by admin


தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரனுக்கு எதிராக வவுனியா மையப்பகுதியிள் இருவேறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. அச்சுவரொட்டிகளுக்கு தமிழர் தயாகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கம் உரிமை கோரியுள்ளது.

அச்சுவரொட்டிகளில் உச்ச துரோகத்தின் குறியீடு….

சுமந்திரன் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடாது…..

துமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியையும் இராஜினமாச் செய்யவேண்டும்….

இனவாத கலவரங்கள், வெகுஜன கொலைகள், சிங்கள அடக்குமுறை, தமிழ் நிலங்கள் கைப்பற்றப்படுவதை நிறுத்துவது உள்ளிட்டவற்றிலிருந்து, தமிழ் மக்களை பாதுகாப்பதற்காக சமஷ்டி தேவை என்பது பல காலமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இதனை தந்தை செல்வா தனது கொள்கையாக ஏற்றுப் போராடினார். என்றவாறு பலவிடயங்கள் இந்த சுவரொட்டிகளில்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மற்றைய சுவரொட்டியில்,சமஷ்டிக்கு மறுபெயர் கூட்டாட்சி சமஷ்டி (கூட்டாட்சி) என்றால் என்ன?

என்று தலைப்பிடப்பட்டு பல்வேறு விடயங்களை குறிப்பிட்டதுடன் இறுதியில் ஒற்றை ஆட்சியை (ஏக்கிய ராஜ்ஜ) சமஷ்டி அமைப்பே என்று தமிழர்களை முட்டாளாக்குவதுதான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகளின் முட்டாள் தர்க்கம் என்று பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் இவ்விரண்டு சுவரொட்டிகளுக்கும் தமிழர் தயாகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடிக் கண்டறியும் குடும்பங்களின் சங்கம் உரிமை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று காலை முதல்இந்த சுவரொட்டிகளை, வவுனியாவில் பழைய பேருந்து தரிப்பிடம், குருமன்காடு, குடியிருப்பு, வைரவப்புளியங்குளம் புதிய பேருந்து நிலையம், போன்ற பல்வேறு பகுதிகளிலிலும் காணக்கூடியதாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More