ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோரைக் கொலை செய்ய சதி செய்யும் வகையில் பிரதி காவல்துறைமா அதிபர் நாலக சில்வா தொலைபேசியில் கலந்துரையாடியதாகக் கூறப்படும் விடயம் தொடர்பில், புலனாய்வுப்பிரிவினர் முன்னெடுக்கும் சிறப்பு விசாரணைகளின் போது காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை புலனாய்வுப்பிரிவின் மனிதப் படு கொலைப் பிரிவு முன்னெடுத்துள்ள சிறப்பு விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களை மையப்படுத்தயே காவல்துறைமா அதிபரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் எப்போது விசாரணை மேற்கொள்ளப்படும் என்னும் தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.