Home இந்தியா அற்புதம்மாள் ஆளுநரை சந்தித்து மனு கையளிப்பு

அற்புதம்மாள் ஆளுநரை சந்தித்து மனு கையளிப்பு

by admin

இந்திய முன்னாள பிரதமர் ரஜீவ் காந்தி கொலை தொடர்பில் சிறையில் உள்ள எழுவர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டதனையடுத்து, தமிழக அமைச்சரவையும் கூடி ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பாக பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. அந்த பரிந்துரை தமிழக அரசினால் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில் இதுகுறித்து வெளிப்படையான, தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என அளுனர் மாளிகை தெரிவித்திருந்தது. தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை ராஜீவ் காந்தி படுகொலையின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், தன் மகனை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இன்று திங்கள்கிழமை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து மனு அளித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அற்புதம்மாள், எழுவர் விடுதலையைப் பரிந்துரைத்து தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. எழுவர் விடுதலை ஆளுநர் கையெழுத்தால் தான் தாமதிக்கப்படுகிறது. ஆளுநர் என்னிடம் அனுசரனையாக நடந்துகொண்டார். என் மனுவை படித்துப் பார்த்தார். அந்த மனுவில், என் மகனுக்கு எப்படி பரோல் கிடைத்தது, மேலும் பரோல் நீட்டிப்பு எதனால் கிடைத்தது என்பது குறித்து குறிப்பிட்டிருக்கிறேன்.

மேலும், தீர்ப்பில் குளறுபடிகள் இருப்பதாகக் கூறிய நீதிபதி கே.பி.தாமஸின் கருத்து, மறைந்த நீதிபதி கிருஷ்ணய்யர் வலியுறுத்திய புத்தகம், சிடி உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளேன்.விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் உறுதியளித்தார் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் மனுவில் இருந்த திருத்தம் ஒன்றை ஆளுநர் சொன்னதற்கமைய அதனை நான் திருத்தினேன். தமிழக அரசின் தீர்மானத்தில் கையெழுத்திட்டு விரைவில் என் மகன் விடுதலையாவான் என்ற நம்பிக்கையுள்ளது. உச்ச நீதிமன்றம், அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் மரியாதையளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

எழுவர் விடுதலையில் இழப்பீட்டை எதிர்பார்த்து தான் எதிர்ப்பு கிளம்புகிறது. உயிருடன் சித்ரவதை அனுபவிக்கும் எனக்கும் என் மகனுக்கு என்ன இழப்பீடு வழங்கப்படும்?’ என அற்புதம்மாள் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More