Home இலங்கைசிறுமியின் கையை பிடித்த குற்றச்சாட்டுக்காக முதியவருக்கு விளக்க மறியல்

சிறுமியின் கையை பிடித்த குற்றச்சாட்டுக்காக முதியவருக்கு விளக்க மறியல்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழில் ஆறு வயது சிறுமியின் கையை பிடித்தார் எனும் குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட 70 வயது முதியவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். நாவற்குழி பகுதியில் கடந்த சனிக்கிழமை வீதியால் நடந்து சென்ற சிறுமியை முதியவர் தவறான நோக்கத்துடன் கையை பிடித்து இழுத்தார் என சிறுமியின் பெற்றோரால் சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் குறித்த முதியவரை கைது செய்து சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தினார்கள்.

குறித்த வழக்கை விசாரித்த பதில் நீதிவான் முதியவரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்டார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More