Home இலங்கையாழில் இரட்டை குழந்தைகளைப் பிரசவித்த தாயார் உயிரிழப்பு

யாழில் இரட்டை குழந்தைகளைப் பிரசவித்த தாயார் உயிரிழப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 
இரட்டை குழந்தைகளைப் பிரசவித்த தாயார் ஒருவர் உயிரிழந்தாக யாழ். போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ். வேலணையைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயாரான விஜயகுமார் நிரோஜனி (வயது-32) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

குறித்த கர்ப்பிணித் தாய் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பிற்பகல் 3 மணியளவில் இரண்டு ஆண் குழந்தைகள் பிரசவித்துள்ளார்.

இந்த நிலையில் தாயார் மாலை 4 மணியளவில் உயிரிழந்துள்ளார் என சட்ட மருத்துவ விசாரணையில் தெரிவிக்கப்படுகிறது.

தாயாரின் அமினி ஓடிக் திரவம் (பன்னீர்க்குடம்) குருதியில் கலந்துகொண்டதால் இறப்பு ஏற்பட்டது என்று சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்கூற்றுப் பரிசோதனயின் சடலம் நேற்றுத் திங்கட்கிழமை மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. இதேவேளை, உயிரிழந்த தாயாரின் இரட்டை குழந்தைகள் ஆரோக்கியமான நிலையில் உள்ளனர் என்று யாழ்.போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More