Home உலகம்பாலியல் குற்றச்சாட்டு – அமெரிக்க நகைச்சுவை நடிகருக்கு 10 ஆண்டு சிறை…

பாலியல் குற்றச்சாட்டு – அமெரிக்க நகைச்சுவை நடிகருக்கு 10 ஆண்டு சிறை…

by admin


பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட அமெரிக்க நகைச்சுவை நடிகர் பில் கொஸ்பிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டதுஅமெரிக்காவின் பென்சில்வேனியா நகரைச் சேர்ந்த 81 வயதான பில் கொஸ்பி, ஹொலிவுட் படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2004, ஜனவரியில் டெம்பிள் பல்கலைக்கழக பணியாளர் அண்ட்ரியா கான்ஸ்டாண்ட் என்பவருக்கு போதைப் பொருள் கொடுத்து, மயக்கம் கொள்ளவைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்தார் எனத் தெரிவிக்க்பட்டது. இதுகுறித்து அண்ட்ரியா காவற்துறையில் முறையிட்டார். அவரது முறைப்பாட்டின் அடிப்படையில் வழக்குப்படிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் இவர் குற்றவாளி என நிரூபணமானது இந்நிலையில், நேற்று வழங்கப்பட்ட தீர்ப்புபில், பில் கொஸ்பிக்கு 3 முதல் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி ஓ நீல் உத்தரவிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More