குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் சதொச வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை ஏற்படுத்த கூடிய வகையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றது.மன்னார் நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைகழக போராசிரியர் தலைமையில் இடம் பெற்று வருகின்ற மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் மற்றும் ஆய்வு செய்யும் பணி கடந்த வெள்ளிக்கிழமையுடன் உரிய பாதுகப்பு ஏற்பாடுகள் செய்யப்படாது நிறுத்தப்பட்டுள்ளது.
மன்னாரில் தற்போது மழை பெய்வதற்கான காலநிலை காணப்படுகின்றதனால் குறித்த வளாகத்தில் தோண்டப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்படாமல் உள்ள மனித எச்சங்கள் சேதப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.
கடந்த மாதத்தில் மழை பெய்தால் மனித எச்சங்கள் பாதிக்காத வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும் சாதாரண பாதுகப்பு ஏற்பாடுகள் மாத்திரமே செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது அந்த ஏற்பாடுகளும் ஓழுங்கின்றி காணப்படுவதனால் மழை பெய்யும் பட்சத்தில் குறித்த புதை குழியானது முற்றாக சேதப்படும் வாய்புக்கள் காணப்படுவதனால் உரிய நிறுவனங்கள் இவ்விடயத்தில் அக்கறரயுடன் செயற்படுமாறு மன்னார் மாவட்ட சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.