இந்தியா பிரதான செய்திகள்

டெல்லியில் 3 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் சிறுவர்கள் உட்பட 7 பேர்


இந்திய தலைநகர் டெல்லியின் வடமேற்கு பகுதியில் உள்ள சவன் பார்க் என்ற இடத்தில் 5 மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றையதினம் இடம்பெற்ற இந்த விபத்தின் போது பலர் இடிபாடுகளில் சிக்கியிருந்த நிலையில் உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினரும் தீயணைப்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு பலரை மீட்டுள்ளனர்.

இந்த நிலையில் பெண் ஒருவரும் 4 சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவித்த மீட்புப்பணியினர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த 5 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இடிந்து விழுந்த கட்டிடம் 20 ஆண்டுகள் பழமையானது எனவும் கட்டிடம் பலவீனமாக இருந்தது எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.