மெக்ஸிகோவில் காவல்துறையில் போதை பொருள் கடத்தல்காரர்கள் ஊடுருவி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததை அடுத்து, அந்நாட்டு ராணுவம் காவல்துறையை கைப்பற்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ கடற்கரை நகரமான அகபுல்கோ (Acapulco ) வில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அகபுல்கோவில் காவல்துறை தலைமையகத்தினுள் நுழைந்த கடற்படையினர் அங்கிருந்த காவல்துறையினரிடமிருந்த தளபாடங்கள், குண்டு துளைக்காத ஆடைகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி 700 காவல்துறை அதிகாரிகளை நிராயுதபாணியாக ஆக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் அந்த நகர் ராணுவத்தினரின் கண்காணிப்பிலேயே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love
Add Comment