Home உலகம்தேவையற்ற குற்றச்சாட்டு கூறுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும்…

தேவையற்ற குற்றச்சாட்டு கூறுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும்…

by admin


அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் சீனா தலையிட முயற்சிக்கிறது என்பது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்கா முடிவு கட்ட வேண்டும் என சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜெங் சுவாங் தெரிவித்துள்ளார். நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த 26-ந் தேதி கலந்து கொண்டு உரையாற்றிய போது, அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் சீனா தலையிட முயற்சிப்பதாகவும், இது தனது நிர்வாகத்துக்கு எதிரான நடவடிக்கை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். இது உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில், பீஜிங் நகரில் சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜெங் சுவாங்கிடம் இது குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பது சீன வெளியுறவுக்கொள்கையின் கலாசாரம் எனவும், இது உலக அளவில் பாராட்டைப் பெற்றுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், “எந்த நாடு, பிற நாடுகளின் உள் விவகாரங்களில் கூடுதலாக தலையிட்டு வருகிறது என்பதை சர்வதேச சமூகம் தெளிவாக அறிந்திருக்கிறது. தங்களது தேர்தலில் சீனா தலையிட முயற்சிக்கிறது என்பது போன்ற தேவையற்ற குற்றச்சாட்டுகளுக்கும், அவதூறுகளுக்கும் அமெரிக்கா முடிவு கட்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More