பிரதான செய்திகள் விளையாட்டு

போர்முலா வன் ரஸ்ய கிராண்ட்பிரி கார்பந்தயம் – ஹமில்டன் முதலிடம்


ரஸ்யாவில் நடைபெற்ற போர்முலா வன் கார்பந்தயப் போட்டியில் மெர்சிடிஸ் அணிக்காக விளையாடும் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் லுயிஸ் ஹமில்டன் ( Lewis Hamilton )  முதலிடத்தை பிடித்துள்ளார்.   இந்த ஆண்டுக்கான போர்முலா வன் கார்பந்தயப் போட்டி உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடைபெற்று வருகின்ற நிலையில் அதன் 16-வது சுற்றான ரஸ்ய கிராண்ட்பிரி அங்குள்ள சோச்சி நகரில் நேற்று நடைபெற்றது. இதன் போது பந்தய தூரம் 309.745 கிலோ மீற்றர் தூரம் என்னும் இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் போட்டியிட்டனர்.

இதில் லுயிஸ் ஹமில்டன் 1 மணி 27 நிமிடம் 25.181 வினாடிகளில் முதல் வீரராக இலக்கை கடந்து அதற்குரிய 25 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் நீடிக்கிறார். இந்த காலப்பகுதியில் ஹமில்டன் பெற்ற 8-வது வெற்றி இதுவாகும்.
செபஸ்டியன் வெட்டல் 256 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், போட்டாஸ் 189 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும உள்ளனர். அடுத்த போட்டி எதிர்வரும் 7ம் திகதி ஜப்பானில் நடைபெறவுள்ளது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap