இந்தியாவின் கொல்கத்தா நகரின் டும்டும் நகரில் உள்ள திரிமுனால் காங்கிரஸ் கட்சி அலுவலகம் அருகே இன்று காலை சக்திவாய்ந்த குண்டொன்று வெடித்ததில் பிகாஸ் கோஸ் என்னும் 8 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொண்ட காவல்துறையினர் அப்பகுதியிலிருந்து கறுப்பு நிற பை ஒன்றினையும் டையறி ஒன்றினையும் கைப்பற்றியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் தரிமுனால் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தினையே இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Add Comment