Home இந்தியாவீதி விபத்தில் தமிழகத்தில் 2017-ல் 3,507 பேர் உயிரிழப்பு

வீதி விபத்தில் தமிழகத்தில் 2017-ல் 3,507 பேர் உயிரிழப்பு

by admin


வீதி விபத்தில் உயிரிழக்கும் பாதசாரிகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் 2017-ல் மட்டும் அங்கு 3,507 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை மகாராஷ்டிராவில் 1,831 பேரும் ஆந்திராவில் 1,379 டீபரும் உயிரிழந்துள்ளனர்.

இந்திய பூராவும் 2014-ல் 12,330 பாதசாரிகள் விபத்தில் உயிரிழந்திருந்தனர் எனவும் இந்த எண்ணிக்கை, 2017-ல் 20,457 ஆக 66 சதவீதத்தினால் உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகன விபத்தில் இறப்பவர்களிலும் தமிழகம்தான் முதலிடம் வகிப்பதாகவும் இதனால் தமிழ்நாட்டில் 6,329 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மிதமிஞ்சிய வேகம் மட்டுமன்றி வீதிவிதிகளை மதித்து நடக்க வேண்டும் என்ற உணர்வு இல்லாததும் விபத்துகளுக்கு முக்கியக் காரணம் எனச்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More