இலங்கை பிரதான செய்திகள்

வடமாகாண முதலமைச்சருக்கான தீர்வையற்ற வாகனக் கோரிக்கை நிராகரிப்பு

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் தீர்வையற்ற வாகனம் வழங்கப்பட வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனைய மாகாண முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை போன்று வடமாகாண முதலமைச்சருக்கும் தீர்வையற்ற வாகனம் வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் பைஸர் முஸ்தபாவால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தையே அமைச்சரவை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய மாகாண முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட தீர்வையற்ற வாகன சலுகையைவிடக் குறைவான சலுகை வழங்கப்பட்டதால், அதை ஏற்பதற்கு வடமாகாண முதலமைச்சர் மறுப்புத் தெரிவித்திருந்தார்.

இதிலுள்ள நியாயத்தை உணர்ந்துகொண்ட அமைச்சர் பைஸர் முஸ்தபா, அனைத்து மாகாண முதலமைச்சர்களுக்கும் வழங்கப்பட்ட சலுகை போன்றே, வடமாகாண முதலமைச்சருக்கும் வாகன சலுகை வழங்கப்படவேண்டும் என அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்திருந்தார்.

இந்தக் கோரிக்கையை அமைச்சரவை ஏற்றுக்கொண்டபோதிலும், நிதியமைச்சர் மங்கள சமரவீர, வாகனக் கொள்வனவு தொடர்பான தனது அறிக்கையை மீறும் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தியுள்ளதனையடுத்து வடமாகாண முதலமைச்சருக்கான தீர்வையற்ற வாகனக் கோரிக்கையை, அமைச்சரவை நிராகரித்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

1 Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  • Ha ha ha nice trajectory in terms of impartial treatment towards those northern parts of Sri Lankan tamil CM’s position. In fact what other than this part this has been brought in lime light that how those corruption prole in Sri Lankan politics as well state operation as a whole by given so much franchise over purchase over super duper luxury vehicles in 10 star category towards who ever holding such positions in state sector named as public servants by Sri Community lives under those poverty line. Hmmm poor public vs so much power full politicians just fooling others and fulfilling their own franchise by having nice time. May God bless mother Sri Lanka.

Share via
Copy link
Powered by Social Snap