Home பிரதான செய்திகள்அறிமுகப் போட்டியிலேயே சாதனை படைத்த பிரித்வி ஷா

அறிமுகப் போட்டியிலேயே சாதனை படைத்த பிரித்வி ஷா

by admin


மேற்கிந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் புதிய ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய இந்திய அணியின பிரித்வி ஷா முதலாவது போட்டியிலேயே சதமடித்து சாதனை புரிந்துள்ளார். அறிமுகப்போட்டி என்ற பதற்றமே இல்லாமல் 99 பந்துகளில் சதம் அடித்த அவர் அறிமுகப்போட்டில் சதமடித்த 15-வது வீரர் எனும் பெருமையை பெற்றுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணி பிரித்வி ஷா தலைமையில் உலககிண்ணத்தினை கைப்பற்றியிருந்ததுடன் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியின் சார்பாக சிறப்பாக விளையாடியிருந்தார்.  இதைத்தொடர்ந்து செப்டம்பர் மாதம் இந்திய அணிக்கு தேர்வான அவர் அறிமுகப்போட்டியிலேயே முதல் சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More