Home இலங்கைபொம்மைவெளி பிரதேசங்களில் புகுந்த வெள்ள நீர் தொடர்பில் மாநகர சபை துரித நடவடிக்கை

பொம்மைவெளி பிரதேசங்களில் புகுந்த வெள்ள நீர் தொடர்பில் மாநகர சபை துரித நடவடிக்கை

by admin


மழை காரணமாக பொம்மைவெளி சோனகத்தெரு பகுதி தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ள நீர்உட்புகுந்தமையினால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ள விடயத்தை அறிந்து யாழ்ப்பாண மாநகர சபை துரித நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்றைய தினம் அப்பகுதியில் உள்ள கால்வாய்களை சுமார் 30 க்கும் அதிகமான ஊழியர்களை கொண்டு துப்பரவு செய்ததுடன் குறித்த செயற்பாடுகளை மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் பார்வையிட்டுள்ளார். இது தவிர உடனடியாக இப்பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுத்தர உதவிய மேயர் மற்றும் மாநகர ஆணையாளர் ஆகியோருக்கு அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மழை வெள்ளம் காரணமாக குறித்த பகுதி வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More